தஞ்சாவூர்

தஞ்சாவூர் - திருப்பதி ரயில் இயக்க வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூர் - திருப்பதி இடையே விரைவு ரயிலை இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட லஞ்சம் கொடாதோர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. தஞ்சாவூர் - நாகை இடையேயான இரு வழிச் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இப்பணிகளை மீண்டும் தொடங்கி விரைவுபடுத்த வேண்டும். தஞ்சாவூர் - திருப்பதி இடையே விரைவு ரயிலை இயக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே லஞ்சம் தவிர்த்து, வாழ வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். நேர்மையான அலுவலர்களை அடையாளம் கண்டு அவர்களை நேரில் அழைத்து பாராட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இயக்கத்தின் மாவட்டத் தலைவர் கோ. அன்பரசன் தலைமை வகித்தார். இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி. மணிவேல், தஞ்சை நில எடுப்பு தனி வட்டாட்சியர் எஸ். ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினர்.  இயக்கச் செயலர் ஆதி. நெடுஞ்செழியன், அமைப்பாளர் மு. செல்வராஜ், இணைச் செயலர் நா. செந்தில் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT