ஜெயலலிதா பிறந்த நாள்: பள்ளியில் கழிவறை கட்டஅதிமுக சார்பில் ரூ.1லட்சம் நிதியுதவி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பள்ளியில் கழிவறைகள் கட்ட அதிமுக சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பள்ளியில் கழிவறைகள் கட்ட அதிமுக சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்தநாளையொட்டி முன்னிட்டு, கும்பகோணம் அதிமுக சார்பில் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி பாடசாலை பள்ளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தலா 300 புத்தகங்களும், சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 10 கழிவறைகளை கட்டுவதற்காக ரூ. 1 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இதனை பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ரத்னாசேகர், முன்னாள் அதிமுக நகர செயலாளர் பி.எஸ்.சேகர் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜூ, பள்ளியின் பழைய மாணவர் சங்க தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.