முகப்பு
தஞ்சாவூர்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ரயிலில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு அனைத்து வகை

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

ரயிலில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் பயணச் சீட்டு வாங்குவதில் இருக்கக்கூடிய சிரமத்தைக் களைய வேண்டும். சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓய்வு எடுக்கும் அறை வசதி வேண்டும். 
மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச கழிப்பிடம் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யும் பெட்டிகளைப் பற்றித் தெளிவான அறிவிப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.எம். இளங்கோவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சி. சங்கிலிமுத்து, நகரச் செயலர் சி. ராஜன்,  நிர்வாகிகள் கே. கிருஷ்ணமூர்த்தி,  எஸ். சேகர்,  எம். வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →