ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மே 25 இல் திருக்கல்யாணம்
கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேசுவர சுவாமிக்கு மே 25-ஆம் தேதி திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.
கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேசுவர சுவாமிக்கு மே 25-ஆம் தேதி திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, மே 24ஆம் தேதி நிச்சயதார்த்த விழா நடைபெறுகிறது. இதையொட்டி இரவு 7மணிக்கு அம்பாள் தவக்கோல நிகழ்வும், அன்றிரவு மங்களாம்பிகைக்கு சிவபெருமான் காட்சியளித்தலும், திருக்கல்யாணத்திற்கான நிச்சய தாம்பூல நிகழ்வும் நடைபெறும். 25 ஆம் தேதி காலை மாலை மாற்றுதலும், ஊஞ்சலடி உற்சவமும், 12 மணி முதல் 1 மணிக்குள் மங்களாம்பிகை அம்பாளுக்கும், ஆதிகும்பேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
வரும் 29 ஆம் தேதி காலை திருக்கோயிலிலிருந்து சுவாமி அம்பாளுடன் புறப்பாடு நடைபெற்று, பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து சுவாமி, அம்பாள் சங்கரமடத்தில் எழுந்தருளுகின்றனர். 30 ஆம் தேதிசிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகளுடன் விழா நிறைவடைகிறது.