பூவாணம் கிராமத்தில் மணல் லாரி பறிமுதல்
பேராவூரணியை அடுத்த பூவாணம் கிராமத்தில் உள்ள அக்கினி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி ஆற்றுமணல் வெட்டிக் கடத்தப்படுவதாக வந்த தகவலின்
பேராவூரணியை அடுத்த பூவாணம் கிராமத்தில் உள்ள அக்கினி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி ஆற்றுமணல் வெட்டிக் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஜி.சாந்தகுமார் தலைமையில் ஆண்டிக்காடு வருவாய் ஆய்வாளர் அன்புச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் அனுமதி இன்றி ஆற்றுமணல் ஏற்றிக் கொண்டிருந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு, சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.