பைக்கில் சென்ற இளைஞர் சுவரில் மோதி சாவு
கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கம்மாளர் தெருவைச் சேர்ந்த வேம்பு மகன் ராஜா (28). தொழிலாளி. இவரது நண்பர் ஜான்பீட்டர் (26).
கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கம்மாளர் தெருவைச் சேர்ந்த வேம்பு மகன் ராஜா (28). தொழிலாளி. இவரது நண்பர் ஜான்பீட்டர் (26). இருவரும் பட்டீஸ்வரத்திலிருந்து தாராசுரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு வருவதற்காக பைக்கில் வந்தனர்.
இவர்களது வாகனம் சோழன் மாளிகை அருகில் வந்த போது, நிலைதடுமாறி சாலையோர சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜான்பீட்டர் காயமடைந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் அளித்ததுடன், காயமடைந்த ஜான்பீட்டரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்து அங்கு வந்த பட்டீஸ்வரம் போலீஸார், இறந்த ராஜாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.