மணல் குவாரியை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதம்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க உள்ளதைக் கைவிட வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க உள்ளதைக் கைவிட வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
காவிரியில் தண்ணீர் வரும்போதும், மழைகாலத்திலும் மணல்தான் தண்ணீரை உறிஞ்சி பூமிக்குக் கீழே நிலத்தடி நீராகச் சேமிக்கிறது. இந்நிலையில், தமிழக அரசு முதல் முறையாக காவிரி ஆற்றில் திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க ஏற்பாடுகள் செய்தது. குவாரி அமைக்க சாலைப் பணிகளை மே 5-ம் தேதி தொடங்கியபோது, அதை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் பகுதியில் உள்ள காவிரியில் மணல் குவாரியை அமைத்தால் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிடும். இதனால், குடிநீர் மற்றும் விவசாயத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். குடிநீருக்கு மக்கள் அல்லல் பட நேரும்.
எனவே, காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், திருக்காட்டுப்பள்ளி, புதுச்சத்திரம், நடுப்படுகை, ஓன்பத்துவேலி, கூடநாணல் மற்றும் சுற்றுவட்ட கிராம விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கல்லணை செல்லக்கண்ணு தொடங்கி வைத்தார். அமமுக பொருளாளர் எம். ரெங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெ. ஜீவகுமார், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் பேசினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மாலையில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் முடித்து வைத்தார்.
இப்போராட்டத்தை கூடநாணல் தங்க. திருஞானசம்பந்தம், திருக்காட்டுப்பள்ளி ஜெயராமன், ஓன்பத்துவேலி மோகன், நடுப்படுகை ராஜா, புதுச்சத்திரம் சரவணவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.