தஞ்சாவூர்

பேராவூரணியில்  பேரிடர் மேலாண்மை குழு கூட்டம்

DIN

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்,  பேராவூரணி சரக பேரிடர் மேலாண்மைக் குழு கூட்டம் மண்டல அலுவலரும், தனி வட்டாட்சியருமான ரீட்டா ஜெர்லின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
சரக வருவாய் ஆய்வாளர் எம்.அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில் பேரூராட்சி, காவல்துறை, மின்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள்,  மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
வடகிழக்கு பருவமழை மற்றும் இயற்கை பேரிடர்களை கண்காணித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு நடைபெற்ற இக்கூட்டத்தில் மழை, வெள்ளம் புயல் இயற்கை பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 
மேலும்,  கண்காணிப்பு குழு மூலம், எவ்வித சவால்களையும் எதிர்கொள்ளும் விதமாக ஆயத்த நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. 
நிறைவாக கிராம நிர்வாக அலுவலர் செல்வம் நன்றி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

ரிஷப் பந்த் உள்ளுணர்வு சார்ந்த கேப்டன்: கங்குலி புகழாரம்!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

SCROLL FOR NEXT