இறகுப்பந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
கல்வி மாவட்ட அளவிலான இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் காதிர்
கல்வி மாவட்ட அளவிலான இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டப்பட்டனர்.
தஞ்சாவூர் பள்ளிக்கல்வித் துறை சார்பில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஏ.அஸ்மிதா, ஏ. ஆமீனா மரியம் ஆகியோர் இறகுப்பந்து இரட்டையர், ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டு, கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மண்டலப் போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.
இதையொட்டி, சாதனை புரிந்த 2 மாணவிகளையும் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜெ.அபுல்ஹசன், பள்ளித் தலைமை ஆசிரியை எம்.சுராஜ், உடற்கல்வி ஆசிரியை ஜி.அகிலா மற்றும் ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகள் பாராட்டினர்.