காலமானார்: பாத்திமா
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாரதி என்கிற பாத்திமா உடல் நலக் குறைவு காரணமாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாரதி என்கிற பாத்திமா உடல் நலக் குறைவு காரணமாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே உமையாள்புரம் தெற்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகள் பாரதி (45).
கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக வெளிநாட்டுக்கு சென்ற பாரதி, தனது பெயரை பாத்திமா எனமாற்றிக் கொண்டார். தாயகத்துக்குத் திரும்பிய இவர் 2013 ஆம் ஆண்டு முதல் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் உதவியாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாத்திமாவுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். பாத்திமாவின் உடல் சொந்த ஊரான உமையாள்புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்துவரப்பட்டு, இறுதி சடங்கு செய்யப்பட்டது. பாத்திமாவுக்கு கணவர், மகள், மகன் உள்ளனர்.