தஞ்சாவூர்

பேராவூரணி அருகே  பேரிடர் மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள காரங்குடா கடலோரக் கிராமத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் புயல், மழை வெள்ளக் காலங்களில், பொதுமக்கள், கால்நடைகள் உள்ளிட்டவற்றைக் காக்கும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு கால நிவாரண ஒத்திகைப் பயிற்சியை தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை, கடலோரக் காவல் படையுடன் இணைந்து காரங்குடா கிராமத்தில் நடத்தியது. 
இதையொட்டி புயல், மழைக் காலங்களில் கடலுக்குள் சென்று ஆபத்தில் சிக்கிய மீனவர்களைக் காப்பாற்றுதல், காயம் பட்டவர்களுக்கு முதலுதவி, புயல், பலத்த காற்று வீசும் நேரங்களில்  கடலோரங்களில் குடியிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தல், அவர்களுக்கு உணவு, உடை, பால், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தருவது எனப் பேரிடர் காலங்களில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், தஞ்சாவூர் பயிற்சி உதவி ஆட்சியர் சதீஷ்குமார், பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி, வட்டாட்சியர்கள் பேராவூரணி க. ஜெயலெட்சுமி, பட்டுக்கோட்டை அருள்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் (பட்டுக்கோட்டை) பாஸ்கரன், கடலோரக் காவல்படை ஆய்வாளர் சுபா, சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் வீர. அண்ணாதுரை,  வருவாய், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், காவல்துறை, கடலோரக் காவல்துறை, வனத்துறை, மின்துறை, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் பல்வேறு அரசுத் துறையினர் கலந்து கொண்டனர்.  இதையொட்டி சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் தலைமையில் மருத்துவர்கள் ரேவதி, சர்மிளா மற்றும் குழுவினர் நடத்திய  இலவச மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .  காலை 8 மணிக்குத் தொடங்கிய  ஒத்திகைப் பயிற்சி மதியம் 3 மணிக்கு நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT