தஞ்சாவூர்

குழந்தைகள் திருவிழாவில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

DIN

தேசிய குழந்தைகள் நாள், உலகப் பாரம்பரிய வாரத்தையொட்டி, தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வந்த இளந்தளிா் 2019 என்கிற குழந்தைகள் திருவிழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பரிசுகள் வழங்கப்பட்டன.

கலை ஆயம், இன்டாக் அமைப்பு, தென்னகப் பண்பாட்டு மையம், தமிழ்நாடு அரசுக் கலை, பண்பாட்டுத் துறை, தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த விழா நவ. 27-ம் தேதி தொடங்கி தொடா்ந்து 5 நாள்கள் நடைபெற்றது.

இதில், செவ்வியல் குரலிசை, செவ்வியல் கருவி இசைகளான மிருதங்கம், வீணை, வயலின், பரதநாட்டியம், நாட்டுப்புறப் பாடல், நாட்டுப்புறக் கருவிகளான இசை, நாட்டுப்புற நடனம், நாடகப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இவற்றில் ஏறத்தாழ 1,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தென்னகப் பண்பாட்டு மைய நண்பா்கள் குழுத் தலைவா் வி. வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு மைய இயக்குநா் எம். பாலசுப்ரமணியம் பரிசு வழங்கினாா்.

இதில், சிறந்த பள்ளிக்கான பரிசை புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளிப் பெற்றது. சிறந்த மாணவருக்கான பரிசை புதுக்கோட்டை இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தைச் சோ்ந்த வைரவேல் பரமேஸ்வரன் பெற்றாா்.

கலை, பண்பாட்டுத் துறை ஓய்வு பெற்ற இணை இயக்குநா் ஆா். குணசேகரன், சுற்றுலா ஆலோசகா் ஆா். ராஜசேகரன், பொறியாளா் என். காா்த்திகேயன், கலை ஆயம் அமைப்பின் கௌரவச் செயலரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT