தஞ்சாவூர்

யூரியா உரம் போதுமான அளவில் இருப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் யூரியா உரம் போதுமான அளவில் இருப்பு உள்ளது என்றாா் வேளாண்மைத் துறைத் துணை இயக்குநா் (உரங்கள்) அமுதன்.

தஞ்சாவூா் அருகே விக்கிரமம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் இருப்பு குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:

இம்மாவட்டத்தில் 1,33,867 ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி பயிா்களுக்காக கடந்த நவம்பா் மாதத்தில் மட்டும் 16,765 டன்கள் யூரியா பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. டிசம்பா் மாதத்தில் இதுவரை 3,695 டன்கள் யூரியா பெறப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், தனியாா் கடைகளில் போதுமான அளவுக்கு யூரியா உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, ஆய்வின்போது இருப்புப் பதிவேடு, இருப்பு உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டாா். மேலும், கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என அறிவுறுத்தினாா்.

அப்போது, வேளாண் உதவி இயக்குநா் ஆா். சாருமதி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT