தஞ்சாவூர்

பெரியகோயிலில் சித்திரை பெருவிழாவுக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

DIN

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு,  பந்தல்கால் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதப் பெருவிழா 15 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு சித்திரைப் பெருவிழா ஏப். 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து நாள்தோறும் மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறும். சித்திரைத் தேரோட்டம் ஏப். 16-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, பெரியகோயில் வளாகத்தில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல் கால் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, மேற்பார்வையாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT