தஞ்சாவூர்

மூன்று பெருமாள் கோயில்களில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்

DIN

கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோயில்களில் மாசிமகப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் நகரில் உள்ள ஐந்து முக்கிய வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக சக்கரபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசிமகத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை காலை கொடி மரம் அருகே சக்கரபாணி சுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் எழுந்தருளினார். அப்போது கொடி மரத்துக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கருடன் உருவத்துடன் கூடிய கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து, பிப். 21-ம் தேதி வரை சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. பிப். 19-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்குள் மாசி மகத்தை முன்னிட்டு விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயாருடன் சக்கரபாணி சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். 
காலை 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை காவிரி சக்கர படித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இதேபோல,  ராஜகோபால சுவாமி கோயிலில் கொடிமரம் அருகே திங்கள்கிழமை காலை ருக்மணி, சத்யபாமாவுடன் ராஜகோபால சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து, மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆதிவராக பெருமாள் கோயில் கொடிமரம் அருகே பெருமாள் அம்புஜவல்லித் தாயாருடன் எழுந்தருளியதைத் தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT