தஞ்சாவூர்

ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம்: பேராவூரணியில் செயல்முறை விளக்கம்

DIN

பேராவூரணியில் ஒப்புகைச் சீட்டுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கம் செவ்வாய்க்கிழமை செய்து  காண்பிக்கப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான சந்தேகத்தை போக்கவும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பேராவூரணி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் இந்த செயல்முறை விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
வாக்குச்சாவடி முன்பாக வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வது குறித்து விளக்கப்பட்டது. வாக்காளர் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர், மற்றும் வேட்பாளரின் சின்னம் ஆகிய விவரங்களை  பொதுமக்கள் வாக்களிக்கும் இயந்திரத்தில் பட்டனை அழுத்தி தெரிந்து கொண்டனர். 
 இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப்அலி, சுப்பிரமணியன், ஜோதி, தேர்தல் உதவியாளர் முருகானந்தம் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT