தஞ்சாவூர்

சாஸ்த்ரா சார்பில் கிராம மக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள்

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் நான்கு கிராம மக்களுக்கு 19 ஆம் ஆண்டாகப் பொங்கல் பரிசுப் பொருட்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருமலைசமுத்திரம், வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி ஆகிய கிராம மக்களுக்கு அரிசி 5 கிலோ, வெல்லம் ஒரு கிலோ, பருப்பு ஒரு கிலோ, பருத்தி சேலை, வேட்டி, துண்டு ஆகியவை வழங்கப்பட்டது. இதன் மூலம், திருமலைசமுத்திரத்தில் 642 குடும்பங்களும், வல்லம்புதூரில் 476 குடும்பங்களும், மொன்னையம்பட்டியில் 240 குடும்பங்களும், குருவாடிப்பட்டியில் 434 குடும்பங்களும் என மொத்தம் 1,792 குடும்பங்கள் பயனடைந்தன. இப்பொருட்களை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தலைவர் ஆர். சேதுராமன், துணைவேந்தர் எஸ். வைத்யசுப்பிரமணியம், முதன்மையர் எஸ். சுவாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT