தஞ்சாவூர்

விவசாய சங்க பிரதிநிதியை தாக்கியவர் கைது

DIN


பாபநாசம் அருகே வயல் பிரச்னை காரணமாக விவசாய சங்க பிரதிநிதியை தாக்கியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
பாபநாசம் அருகே மாலாபுரம் கிராமம், கீழத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (46). தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர். மாலாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46). பாஜகவின் ஒன்றிய செயலாளர். இவர்கள் இருவருக்குமிடையே வயல் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், கண்ணன் வெள்ளிக்கிழமை பெருமாங்குடியில் உள்ள தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி கண்ணனை வழிமறித்து அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கினாராம். காயமடைந்த கண்ணன் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
கண்ணன் அளித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இதேபோல், கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின்பேரில் கண்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாபநாசத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து கண்ணன் மறியலில் ஈடுபட்டாராம். அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக கண்ணன் மீது போலீஸார் மேலும் ஒரு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT