தஞ்சாவூர்

பாபநாசத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம்

DIN


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கீழவீதி கடைவீதியில் பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அம்மாபேட்டை ஒன்றியச் செயலர் எ.வி. சூரியநாராயணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம். ராம்குமார்,இளமதி சுப்ரமணியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ். மோகன், ஒன்றிய அவைத் தலைவர் ஆர். சபேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மயிலாடுதுறை எம்பி ஆர்.கே. பாரதிமோகன், தலைமைக் கழகப் பேச்சாளர் பாத்திமா பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் ஆர்.எஸ். கண்ணபிரான், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலர் ஒ.ஏ. ராமச்சந்திரன், கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் சி. முத்து, எஸ். கண்ணன், என். சதீஷ், எஸ்.என். சேகர் மற்றும் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்பகோணம் ஒன்றியச் செயலர் சோழபுரம் அறிவழகன் வரவேற்றார். பாபநாசம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கே. கோபிநாதன், நகரச் செயலர் வி. நாகைய்யன் உள்ளிட்டோர் நன்றி கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT