தஞ்சாவூர்

பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தஞ்சாவூர் தலைமை  அஞ்சலகம் முன்பு ஏஐடியுசி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தொழிலாளர் நலச் சட்டங்கள் 44-ஐ நான்காகக் குறைப்பது, பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது, மத்திய பட்ஜெட்டில் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக சலுகைகள் அறிவித்தது,  பெட்ரோல் - டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார் தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்டத் தலைவர் வெ. சேவையா, பொருளாளர் தி. கோவிந்தராஜன், துணைச் செயலர் துரை. மதிவாணன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் க. அன்பழகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT