தஞ்சாவூர்

கும்பகோணத்தில் பருத்தி ஏலம் தொடக்கம்

DIN

கும்பகோணம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிகழாண்டுக்கான பருத்தி மறைமுக ஏலம் புதன்கிழமை தொடங்கியது.
இதில் திருநீலக்குடி, தென்னூர், வேப்பத்தூர், விளத்தூர், அகராத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 விவசாயிகள் 457 குவிண்டால் எடையுள்ள பருத்தியை மறைமுக ஏலத்துக்குக் கொண்டு வந்தனர். இவற்றை ஏலத்தில் எடுப்பதற்காக சேலம், கும்பகோணம், செம்பனார்கோவில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பருத்தி வியாபாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் கொண்டு வந்த பருத்திக்கு வியாபாரிகள் விலை நிர்ணயித்து ஏலப் பெட்டியில் போட்டனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலையில் ஏலச்சீட்டுகள் விவசாயிகள் மத்தியில் படிக்கப்பட்டது. இதில் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 5,669-ம், குறைந்தபட்ச விலையாக ரூ 4,400-ம், சராசரி விலையாக ரூ. 5,279-ம் முடிவானது. பருத்திக்கான தொகை வங்கி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT