தஞ்சாவூர்

சோதனைக்குச் சென்றபோது அலுவலர்களை கடைக்குள் வைத்து மூடிய ஊழியர்கள்

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனைக்காகக் கடைக்குள் சென்ற மாநகராட்சி அலுவலர்களை உள்ளே வைத்து ஊழியர்கள் மூடினர்.
தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கீழவாசல் பகுதியில் உள்ள கடையில் மாநகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். கடைக்குள் சோதனை செய்து கொண்டிருந்த 4 துப்புரவு ஆய்வாளர்கள், 2 மேற்பார்வையாளர்கள் இருந்தபோது, ஊழியர்கள் வெளியே ஷட்டர் கதவை மூடிவிட்டு, ஓடிவிட்டனர். வெளியே இருந்த அலுவலர்கள் ஷட்டர் கதவைத் தூக்கிவிட்டு வெளியே அழைத்து வந்தனர். 
இதுகுறித்து கிழக்குக் காவல் நிலையத்தில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கடை உரிமையாளர் சங்கர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT