சேதுபாவாசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவருடைய கண்ணாடியிழை படகில் அவருடன் சேதுபாவாசத்திரம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த பஷீர்முகமது மகன் சேக்முகமது (21), சர்புதீன் மகன் ஹாஜாமுகையதீன் (26)ஆகியோர் திங்கள்கிழமை மாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
சேதுபாவாசத்திரத்திலிருந்து 3 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் வீசிய வலையை சேக்முகமது படகுக்குள் இழுத்தபோது நிலை தடுமாறி தலைகுப்புற கடலுக்குள் விழுந்து விட்டார். உடன் இருந்த மீனவர்கள் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.அவரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், 2 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை மாலை புதுப்பட்டினம் கடற்கரையோரத்தில் சேக் முகமது உடல் கரை ஒதுங்கியது. சேதுபாவாசத்திரம் போலீஸார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.