தஞ்சாவூர்

கோடைகால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

DIN

தஞ்சாவூரில் கலை பண்பாட்டுத் துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் கோடைகால கலைப் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் இரா. குணசேகரன் தெரிவித்திருப்பது: 
 கோடை விடுமுறையைக் குழந்தைகள் பயனுள்ள வகையில் பயனடைய வேண்டி, ஒவ்வொரு மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், யோகா, ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலைகளில் கலைப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.   இப்பயிற்சி முகாம் புதன்கிழமை (மே 1) முதல் மே 10-ம் தேதி வரை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சிப் பெற்றமைக்கான சான்றிதழ்கள் முகாம் நிறைவு விழாவில் வழங்கப்படும். 
பயிற்சி முகாமில் சேர விருப்பமுள்ள குழந்தைகள் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள அரசர் மேல்நிலைப் பள்ளிக்கு புதன்கிழமை காலை 9 மணிக்கு நேரில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT