தஞ்சாவூர்

சக்கரபாணி சுவாமி கோயிலில்  மே 18இல் தெப்பத்  திருவிழா

DIN

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் வரும் 18ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.
பாஸ்கரஷேத்திரம் என்றழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில்,  வரும் 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு விசாக நட்சத்திரம் பௌர்ணமி தினத்தில் கோயில் வளாகத்தில் உள்ள
அமிர்த புஷ்கரணியில் விஜயவல்லி, சுதர்சனவல்லித் தாயாரோடு சக்கரபாணி சுவாமி அலங்கரிக்கப்பட்ட சுழலும் சுதர்சன சக்கர தெப்பத்தில் எழுந்தருள உள்ளார்.
தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர் இணைந்து செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT