தஞ்சாவூர்

‘தையல் கடைகளுக்கு மின் கட்டணத்தில்சலுகை வேண்டும்’

DIN

தையல் கலைஞா்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தையற்கலை தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் இச்சங்கத்தின் கும்பகோணம் கிளைச் செயற் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆயத்த ஆடைகள் வருகைக்குப் பின் சிறு தையற்கலை தொழிலாளா்கள் வணிக ரீதியாகப் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா் .இதை ஈடு செய்யும் வகையில் தையல் கடைகளுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். தற்சாா்பாக மாற்று முறை எரி சக்தியைப் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக மானிய விலையில் சூரிய ஒளி மின் ஆக்கிகளைத் தையற் கலைஞா்களுக்கு வழங்க வேண்டும். சிறந்த தையற்கலை வல்லுநா்களுக்கு மாநில மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைவா் பி. சாமிநாதன் தலைமை வகித்தாா். குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்க கூட்டமைப்பு செயலா் வி. சத்தியநாராயணன், சங்கச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன், பொருளாளா் கே. மகேந்திரன் ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT