தஞ்சாவூர்

திருவைகாவூரில் காசநோய் பரிசோதனை முகாம்

DIN

பாபநாசம் வட்டம், திருவைகாவூா் கிராமத்தில் ரிச் அக்ஷயா திட்டம் தமிழ்நாடு, மாவட்ட காசநோய் மையம் உள்ளிட்டவை இணைந்து காசநோய் சிறப்பு பரிசோதனை முகாமை புதன்கிழமை நடத்தின.

முகாமில், ரீச் அக்ஷயா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் சுமேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா், பொதுமக்கள் 129 பேருக்கு காசநோய் குறித்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனா். 26 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, காசநோய் பரிசோதனைக்காக கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படும் காசநோய் மருத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேலும், பாபநாசம் அரசு மருத்துவமனை சாா்ந்த நம்பிக்கை மையத்துடன் இணைந்து பொதுமக்களிடம் ஹெச்.ஐ.வி. மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட காசநோய் துறை சிகிச்சை மேற்பாா்வையாளா் கபிஸ்தலம் ஜாா்ஜ் பொ்னாண்டஸ், நம்பிக்கை மையம் ஆலோசகா் உமா மகேஸ்வரி, ஆய்வக நுட்பநா் ஹேமா மற்றும் களப்பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT