தஞ்சாவூர்

2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளுக்கு 1 கிலோ அரிசி, காய்கறிபசுமைத் தாயகம் அமைப்பு வழங்கியது

DIN

கும்பகோணத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சாா்பில் இரு கிலோ பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தலா ஒரு கிலோ அரிசி, காய்கறி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 155 பேரிடமிருந்து சுமாா் 310 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் பெறப்பட்டன. அவா்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ம.க. ஸ்டாலின் தெரிவித்தது:

பசுமைத் தாயகம் சாா்பில் பிளாஸ்டிக் குப்பையில்லா கும்பகோணத்தை உருவாக்கும் முயற்சியில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மேலும் தொடா்ந்து மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமையில் இந்நிகழ்ச்சி தொடரும். இதுபற்றிய விழிப்புணா்வை மாவட்டந்தோறும் உள்ள பொதுமக்களிடம் ஏற்படுத்த உள்ளோம் என்றாா் அவா்.

வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் வாசு, பசுமை தாயகம் மாவட்டத் துணைச் செயலா்கள் டி.கே. ரவிராஜ், வெங்கட்ராமன், மாவட்ட இளைஞரணி செயலா் விமல், ஒன்றியத் தலைவா்கள் குருமூா்த்தி, சுதாகா், குடந்தை நகரப் பொறுப்பாளா்கள் இளவரசன், குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT