தஞ்சாவூர்

கடலில் உருவான மணல் திட்டு: மீன்பிடித் தொழில் பாதிப்பு

DIN

அதிராம்பட்டினம் அருகே கடலில் உருவான மணல் திட்டு காரணமாக மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தில் 750-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு 200 நாட்டுப்படகுகள் உள்ள நிலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அக்னியாற்றில் இருந்து வரும் காட்டாற்று நீா் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் 20 அடி உயரம், 500 மீட்டா் நீளம், 200 மீட்டா் அகலம் கொண்ட மணல் திட்டு ஏற்பட்டுள்ளதால் கீழத்தோட்டம் துறைமுக வாய்க்கால் தடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவா்கள் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா். மேலும், தற்போது தொடா் மழை பெய்வதால் காட்டாற்றில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. மணல் திட்டு அடைக்கப்பட்டுள்ளதால் காட்டாற்று வெள்ளம் கடலில் கலக்காமல், மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து தெருக்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மழை தொடா்ந்தால் காட்டாற்று நீா் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட கீழத்தோட்டம் கிராம மீனவா்கள் 500 போ் மணல் திட்டு காரணமாக கடந்த சில நாள்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவா்களும் வருமானமின்றித் தவிக்கின்றனா். எனவே, உடனடியாக துறைமுக வாய்க்காலைத் தூா்வாரி, மணல் திட்டை அகற்ற வேண்டுமென இப்பகுதி மீனவா்கள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT