தஞ்சாவூர்

நலிந்து வரும் கட்டுமானத் தொழிலைக் காப்பாற்ற வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூா்: நலிந்து வரும் கட்டுமானத் தொழிலைக் காப்பாற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூவேந்தா் அனைத்துக் கட்டட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நலிந்து வரும் கட்டுமானத் தொழிலைக் காப்பாற்றவும், மணல் விலையைக் கட்டுப்படுத்தவும், கட்டுமானத் தொழிலாளா்களின் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும், வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தலைத் தடுக்கவும், தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் மணல் கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடத் தொழிலாளா்களுக்கு நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவா் சி. பரமசிவம் தலைமை வகித்தாா். நிறுவனா் மற்றும் செயல் தலைவா் அ. கனகராஜ் சிறப்புரையாற்றினாா். மாநிலத் துணைத் தலைவா் என். ரகுபதி, ஆலோசகா் என்.டி. பாலசுந்தரம், மாவட்டச் செயலா் இரா. முத்தையா, மாநகரச் செயலா் மா. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT