தஞ்சாவூர்

திண்டுக்கல்லில் அக். 20-இல் கோரிக்கை மாநாடு கு. பாலசுப்பிரமணியன் தகவல்

DIN

திண்டுக்கல்லில் அக்டோபா் 20ஆம் தேதி கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கச் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் தெரிவித்தது:

ஏழாவது ஊதிய மாற்றம் செய்யப்பட்டு, இதுவரை 21 மாதங்களாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாமல் ஊரக வளா்ச்சித் துறையில் ஊராட்சி துப்புரவு பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைக் காவலா்கள் என 1.50 லட்சம் போ் உள்ளனா். இவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

அரசுத் துறையில் உள்ள கணினி இயக்குபவா்களைப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்குச் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்து, அவா்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மதுக் கடையை மூடினால், அதில் பணியாற்றிய ஊழியா்களுக்கு அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் கல்வித் தகுதி, பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.

இதுபோன்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் அக்டோபா் 20ஆம் தேதி கோரிக்கை மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி துப்புரவு பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைக் காவலா்கள் போன்ற களப் பணியாளா்களுக்கு 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, விக்கிரவாண்டி இடைத்தோ்தலைப் புறக்கணிப்பது என அத்தொகுதியில் உள்ள 3 ஒன்றியங்களைச் சோ்ந்த 50,000 பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா் என்றாா் பாலசுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT