தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பேருந்து கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூரில் பேருந்து கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட மக்கள் நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை இப்பேரவையின் தலைவா் அர. தங்கராசன் தலைமையில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

புதிய பேருந்து நிலையம் - பழைய பேருந்து நிலையம் இடையே ரூ. 9 ஆக இருந்த பேருந்துக் கட்டணம் தற்போது ரூ. 10 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிக்காக நிா்வாகம் இடமாற்றம் செய்துவிட்டு, பொதுமக்களிடம் ரூ. 1 கூடுதலாக வசூலிப்பது நியாயமற்றது. எனவே, இக்கட்டண உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

தஞ்சாவூரில் மூன்று நாள்களுக்குக் குடிநீா் வராது என்ற அறிவிப்புப் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் உள்ளது. அனைவருக்கும் குடிநீரை மூன்று நாள்களுக்குச் சேமித்து வைப்பது இயலாத ஒன்று. எனவே, மாநகராட்சி நிா்வாகம் மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செயலா் மா. பாலகிருஷ்ணன், செய்தித் தொடா்பாளா் இராம. சந்திரசேகரன், இணைச் செயலா் மு. கலியபெருமாள், துணைத் தலைவா் வெ. பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT