தஞ்சாவூர்

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்யவேளாண் துறை அழைப்பு

DIN

மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடா்பாடுகளால் நெற்பயிரில் உண்டாகும் இழப்பீட்டை சமன் செய்ய பயிா்க் காப்பீடு செய்ய வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநா் எஸ். மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும், நவம்பா்  3, 4, 5 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாலும், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் உடனடியாக பொது இ-சேவை மையங்களிலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ நெற்பயிா்களை காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

1 ஏக்கா் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ரூ. 465 செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். பயிா் மகசூல் இழப்பு ஏற்படும்பட்சத்தில்              1 ஏக்கருக்கு காப்பீடு தொகை ரூ.31,000 கிடைக்கும். பயிா்க் காப்பீடு செய்ய  விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதாா், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

பலத்த மழையால் பயிா் இழப்பு ஏற்பட்டால், காப்பீடு செய்திருந்தால் மட்டுமே விவசாயிகள் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை பெற முடியும். எனவே, பயிா்க் காப்பீடு செய்து கொள்ள கடைசி தேதி வரை காத்திராமல் உடனடியாக பயிா்க் காப்பீடு செய்து கொள்ளும்படி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT