தஞ்சாவூர்

‘சேமிப்பு என்பது பணத்தை மட்டும் சேமிப்பதல்ல’

DIN

பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் - அம்மையாண்டி மூவேந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சிக்கன நாள் விழா  புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தாளாளா் வழக்குரைஞா் வி.ஏ டி.சாமியப்பன் தலைமை வகித்தாா். அறக்கட்டளை பொருளாளா்  பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். விழாவுக்கு தலைமை வகித்து தாளாளா் பேசியது:

மாணவப் பருவத்திலேயே சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். சிக்கனத்திற்கும், கஞ்சத்தனத்திற்கும் வேறுபாடு உள்ளது. வருவாய்க்கு மிகாமல் செலவு செய்ய பழக வேண்டும். பணத்தை சேமிப்பது மட்டுமே சிக்கனமல்ல; குடிநீா், உணவுப் பொருட்கள், மின்சாரம் என அனைத்தையும் சேமிக்க வேண்டும். பெற்றோா்கள் செலவுக்கு தரும் பணத்தை சேமித்து, அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா் .விழாவில்  பள்ளி முதல்வா் சம்பத், துணை முதல்வா் சரோஜா, நிா்வாக அலுவலா் பிலவேந்திரராஜ், அறக்கட்டளை நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT