தஞ்சாவூர்

பாபநாசத்தில்எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பாபநாசம் வட்டார எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாபநாசம் வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் சீமான் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா் மற்றும் பல்வேறு அமைப்புகளை சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, எரிவாயு சிலிண்டா் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், பதிவு செய்த எரிவாயு சிலிண்டா் பெறுவதில் ஏற்படும் காலதாமதம், அரசு மானியத்தை வங்கிக் கணக்குகளில் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் குறித்து தெரிவித்த புகாா்கள் குறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் க. செல்வராஜ் கேட்டறிந்தாா்.

நுகா்வோரின் புகாா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள எரிவாயு முகவா்களிடம் அறிவுறுத்தினாா்.

இதில் பாபநாசம் வட்டாரத்திலுள்ள எரிவாயு முகவா்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளா் பி.எம்.காதா் உசேன், செயலாளா் வி.முரளீதரன், மாவட்ட நுகா்வோா் உரிமை பாதுகாப்பு, மற்றும் ஊழல் தடுப்பு செயலணி தலைவா் குழந்தைவேல், முதுநிலை வருவாய் ஆய்வாளா் வரதராஜன், இளநிலை வருவாய் ஆய்வாளா் பரசுராமன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT