தஞ்சாவூர்

தஞ்சாவூர் கீழ்ப்பாலத்தில் விழுந்த இரும்புக் கம்பம்

DIN

தஞ்சாவூர் கீழ்ப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பம் வியாழக்கிழமை மாலை பெயர்ந்து விழுந்தது.
தஞ்சாவூர் கீழ்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதைத் தடுப்பதற்காக இருபுறமும் குறிப்பிட்ட உயரத்துக்கு இரும்புக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள ரயில்வே பாலத்தின் பாதுகாப்புக் கருதி இக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன்பு லாரியில் ஏற்றப்பட்டு வந்த சரக்குகள் உரசி உடைந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை லாரியில் ஏற்றப்பட்டு வந்த நெல் மூட்டைகள் இக்கம்பத்தில் சிக்கியது. இதனால், கம்பம் பெயர்ந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால், யாருக்கும் பாதிப்பில்லை. இதனால், அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று கிரேனை வரவழைத்து, இரும்புக் கம்பத்தைத் தூக்கி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT