தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

DIN

கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் ஏஐடியுசி சார்ந்த தஞ்சாவூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்டுமானத் தொழிலாளர் மத்திய சட்டத்தையும், நல வாரியத்தையும் 34,000 கோடி நல நிதி இருப்பையும் அழித்து ஒழிக்காதே, நடைமுறையில் உள்ள சட்ட ரீதியான உரிமைகளைத் தட்டிப் பறிக்காதே, தொழிலாளர்களுக்கு 
எதிரான புதிய சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும். 
நிலுவையில் உள்ள கேட்பு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ. பாரதி உள்ளிட்டோர் பேசினர்.
தெரு வியாபாரிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஆர். மதியழகன், ஏஐடியுசி மாவட்டப் பொருளாளர் தி. கோவிந்தராஜன், பட்டு கைத்தறி மாவட்டச் செயலர் கோ. மணிமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT