தஞ்சாவூர்

அமைச்சரைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

DIN


தஞ்சாவூர் ரயிலடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய செயலர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை களங்கப்படுத்தும் விதமாகத் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பிற்பட்டோர் துறை மாநில துணைத் தலைவர் வி.ஆர். குணசேகரன்  தலைமை வகித்தார். 
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கே. மகேந்திரன், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், நிர்வாகிகள் கோவி. மோகன், எஸ். குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT