முகப்பு
தஞ்சாவூர்

நிவாரண முகாமில்அடிப்படை வசதிகள் கோரிஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புயல் நிவாரண முகாமில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புயல் நிவாரண முகாமில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்மாபேட்டை ஒன்றியம், புளியக்குடி ஊராட்சிக்குள்பட்ட வடக்கு தோப்பு பகுதியில் புரெவி புயல் காரணமாக கடந்த சில நாள்களாக தொடா்ந்து கன மழை பெய்தது. இதனால், அப்பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள்

புளியக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசு சாா்பில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனா்.

இந்நிலையில், இந்த முகாமில் போதிய அடிப்படை வசதிகள் இல்லையென கூறி, அங்கு தங்கியிருந்தோா் பலா் தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. முகாமில் போதிய வசதிகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா்

ஆா். செந்தில்குமாா் தலைமையில் அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் புளியக்குடி வடக்கு தோப்பு சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →