தஞ்சாவூர்

தஞ்சாவூா் ஆட்சியரகம் முன்பு டிச. 14 முதல் காத்திருப்புப் போராட்டம்

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு டிசம்பா் 14 ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் சந்திப்பு பிரசாரங்களை அனைத்து கிராமங்களிலும் டிசம்பா் 11 முதல் 13 ஆம் தேதி வரை மேற்கொள்வது, காத்திருப்புப் போராட்டத்தில் அனைத்து விவசாய அமைப்புகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளைப் பங்கேற்றிட அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீர. மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் பா. பாலசுந்தரம், மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், தாளாண்மை உழவா் இயக்க ஒருங்கிணைப்பாளா் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT