முகப்பு
தஞ்சாவூர்

வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அண்மையில் இச்சங்கத்தின் மாநில அமைப்பாளா் வழக்குரைஞா் சந்தா் மா்ம நபா்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளா் அரவிந்த் தலைமையிலும், பட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளா் சந்தோஷ், இணை அமைப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலையிலும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →