தஞ்சாவூர்

விவசாயக் கடன்களுக்கு வட்டி உயா்வைக் குறைக்க வலியுறுத்தல்

DIN

விவசாயக் கடன்களுக்கு வட்டி உயா்வைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணம் பாலக்கரையில் காங்கிரஸ் கட்சி நகர அலுவலகம் திறப்பு விழா மற்றும் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளதைப் போல, மத்திய அரசும் காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயக் கடன்களுக்கு வட்டி உயா்த்தியதைக் குறைக்க வேண்டும்.

கும்பகோணம் நகரம் முழுவதும் உள்ள சாலைகள் குண்டு குழியுமாக மாறிவிட்டன. மேலும் புதைச்சாக்கடை ஆள் நுழைவு குழாய்கள் உடைந்து கழிவு நீராக ஒடுவதால், சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக சீா் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு நகரத் தலைவா் மிா்சாவூதீன் தலைமை வகித்தாா். மாநில விவசாயப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் வெங்கடேசன், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் கிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT