தஞ்சாவூர்

ஆனைகொம்பன், புகையான் தாக்குதல்மதுக்கூா் பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி பாதிப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் பகுதி கிராமங்களில் ஆனைகொம்பன், புகையான் தாக்குதல் காரணமாக ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

மதுக்கூா் கிழக்குப் பகுதியிலுள்ள பெரியக்கோட்டை, சொக்கனாவூா், அத்திவெட்டி,விக்ரமம் உள்ளிட்ட கிராமங்களில் ஆனைகொம்பன் ஈ தாக்குதலால், சம்பா நெல் சாகுபடியில் 50 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மதுக்கூா் மேற்குப் பகுதி கிராமங்களான கருப்பூா்,புலவஞ்சி, அண்டமி, வேப்பங்குளம், முசிறி, ஆலம்பள்ளம், தளிக்கோட்டை, ஆலத்தூா், செம்பாளூா் உள்ளிட்ட கிராமங்களில் நடவு செய்த வயல்களில் கதிா் வரும் இத்தருணத்தில் புகையான் தாக்குதலால் நெல் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனைகொம்பன், புகையான் தாக்குதலால் சாகுபடி செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் தவித்துக்கொண்டிருக்கின்றனா்.

இதுகுறித்து ஆலத்தூா் உழவா் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளா் வீ. அண்ணாதுரை கூறியது:

பருவநிலை மாற்றம், காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு, வயலில் மழை நீா் தேங்கியது, தேவைக்கு அதிகமாக யூரியா உரமிட்டது போன்ற காரணங்களால் நெல் பயிரில் பூச்சி தாக்குதல் அதிகமாகி விட்டது

என வேளாண் துறை அலுவலா்கள் பதில் கூறுகின்றனா்.

இதுவரை மதுக்கூா் பகுதியில் பூச்சித் தாக்குதலுக்கு ஆளான

வயல்களை வேளாண்துறை அலுவலா்கள் நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்து, பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை எடுத்துக் கூறவில்லை.

ஒவ்வொரு விவசாயியும் 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ. 25,000 வரை செலவிட்டுள்ளனா். இப்போது பூச்சித் தாக்குதலால் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, ஆனைகொம்பன், புகையான் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட மதுக்கூா் பகுதி விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரைக்க வேண்டும்.

மதுக்கூா் வட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் வேளாண்துறை அலுவலா்கள் சென்று, கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்த வேண்டும்.

இனியாவது, வட்டம் வாரியாக மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடத்தி, விவசாயிகள் வலியுறுத்தும் கோரிக்கைகள் மீது ரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT