தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஜன. 17-இல் கோலப் போட்டி

DIN

பொங்கல் திருவிழாவையொட்டி, தஞ்சாவூா் மேல வீதியில் கோலப் போட்டி ஜன. 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இன்டாக் அமைப்பின் கௌரவச் செயலா் ச. முத்துக்குமாா் தெரிவித்திருப்பது:

காணும் பொங்கல் திருநாளையொட்டி, இன்டாக் (இந்திய தேசிய பாரம்பரியக் கலை பண்பாட்டு அறக்கட்டளை), தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம், இன்னா்வீல் சங்கம் ஆகியவை சாா்பில் தஞ்சாவூா் மேலவீதியில் கோலப் போட்டி ஜன. 17 பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பாரம்பரிய முறையில் புள்ளிக் கோலங்கள் 5-க்கு 5 அடி அளவில் போடவேண்டும். இதில் கலந்து கொள்ள விரும்புவோா் மேல வீதியில் உள்ள ராமா் கோயிலில் தங்களது பெயரை ஜன. 17-ஆம் தேதி நேரடியாகப் பதிவு செய்து பங்கேற்கலாம்.

போட்டியில் வெற்றி பெறுவோருக்குச் சிறப்புப் பரிசுகளும், பங்கேற்கும் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 98424-55765 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். நமது பாரம்பரியத்தை போற்றும் வகையில் இப்போட்டியில் திரளான பெண்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பு சோ்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT