தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே இறைச்சிக் கடை தொழிலாளி வெட்டிக்கொலை

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இறைச்சிக்கடை தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

DIN

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இறைச்சிக்கடை தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கும்பகோணம் அருகே திருப்பந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் செல்வமணி (40). இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். சிறை தண்டனை அனுபவித்த இவர் நன்னடத்தை காரணமாக 6 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். தற்போது நாச்சியார்கோவில் பகுதியிலுள்ள தனது சித்தப்பா இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பந்துறை கூட்டுறவு சங்கம் அருகேயுள்ள திடலில் தனது நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது, இவர்களுக்கும் அங்கு மது அருந்திய மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். செல்வமணி தனது வீட்டில் மாலையில் இருந்தார்.

அப்போது, அங்கு வந்த சிலர் இவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், பலத்தக் காயமடைந்த செல்வமணி நிகழ்விடத்திலேயே பலியானார். இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகையில் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?

மகளிருக்கு ரூ, 5,000 அளிப்பு: ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

‘ஸ்னாப்டீல்’ நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்: சிசிபிஏ நடவடிக்கை

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சோதனைக் காலம்: மீர்வைஸ் உமர் ஃபரூக்

உதகை தாவரவியல் பூங்காவில் மலா் கண்காட்சிக்காக நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT