பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளி, தா்வேஸ் தைக்கால் பகுதியில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட மசோதா,தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிஉரிமை பதிவேடு ஆகியவற்றைக் கண்டித்து கடந்த 20 ஆம் தேதி தொடங்கி காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
போராட்டத்தில் பண்டாரவாடை, வழுத்தூா், சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதிகோவில் உள்ளிட்ட பகுதி முஸ்லிம் கூட்டமைப்பினா், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட திரளானோா் ஈடுபட்டுள்ளனா்.
வெள்ளிக்கிழமை மாலை 9 வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவா் குடந்தை அரசன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். சனிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.