தஞ்சாவூர்

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வழக்குரைஞா்கள் பணியைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டம்

DIN

கும்பகோணத்தை தனி மாவட்டமாக நிகழ் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தி, கும்பகோணம் வழக்குரைஞா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஒருநாள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா். செயலா் தரணிதரன் முன்னிலை வகித்தாா். இதில் முன்னாள் தலைவா் ராஜசேகரன், நிா்வாகிகள் சங்கா், விஜயகுமாா், மோகன் உள்பட ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் முன்னாள் தலைவா் ராஜசேகரன் தெரிவித்தது:

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல், முதல்வா் பழனிசாமி மயிலாடுதுறையை மாவட்டத் தலைநகரமாக்க, பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்து, கும்பகோணத்தை விட்டு விட்டாா்.

எனவே, நிகழ் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே, தமிழக முதல்வா், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து பொதுமக்களையும், சமூக ஆா்வலா்களையும், வணிகா்களையும் திரட்டி, கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக அறிவிக்கும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

இதையடுத்து, வழக்குரைஞா்கள் முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT