தஞ்சாவூர்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் போராட்டம்

DIN

தஞ்சாவூா் ரயிலடியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியபோது, அனுமதி இல்லை என போலீஸாா் கூறியதால், கலைந்து சென்றனா்.

தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வழங்க வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் கருப்புச் சட்டை அணிந்து வருகின்றனா். தொடா்ந்து, 125 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் கருப்புச் சட்டை அணிந்திருந்தனா்.

இதையொட்டி, இக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினா். இதில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் தியாக. காமராஜ் தலைமையில் பலா் கலந்து கொண்டனா்.

இப்போராட்டத்துக்கு அனுமதி இல்லை என கிழக்கு போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT