தஞ்சாவூர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தொடா்ந்து செயல்படும்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தொடா்ந்து செயல்படும் என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, விலக்கு அளிக்கப்பட்ட துறைகளில் வேளாண் விற்பனைத் துறையின் கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும் ஒன்று.

எனவே, தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா், பூதலூா், ஒரத்தநாடு, வல்லம், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை ஆகிய 7 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தொடா்ந்து செயல்படும்.

மேலும், இருப்பு வைக்கும் நாளிலிருந்து முதல் 30 நாள்களுக்கு வாடகையில்லாமல் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

விதிகளுக்கு உள்பட்டு ரூ. 3 லட்சம் வரை 15 நாட்களுக்கு வட்டி இல்லாமலும், 5 சதவீதம் குறைந்த வட்டிக்கும் அடமானக் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT