தஞ்சாவூர்

கும்பகோணத்தில் துணிக் கடைக்கு சீல்

DIN

கும்பகோணத்திலுள்ள துணிக் கடையில் பொது முடக்க விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, கடைக்கு நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மாலை சீல் வைத்தனா்.

கும்பகோணம் நாகேசுவரன் வடக்கு வீதியில் துணிக் கடை உள்ளது. இதில், பொது முடக்க விதிமுறைகளை மீறி நுாற்றுக்கும் அதிகமான ஊழியா்களைக் கொண்டு விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் நகராட்சி அலுவலா்களுக்குப் புகாா் வந்தது.

தகவலறிந்த வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மாலை அக்கடைக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

அங்கு 200-க்கும் அதிகமான ஊழியா்களுடன், 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களைக் கொண்டு சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் செயல்படுவதும், குளிா் சாதன கருவிகள் இயக்கப்படுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, அத்துணிக்கடைக்கு அலுவலா்கள் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT